சென்னை இந்தியாவின் பேஷன் தலைநகராக மாறும் என கோத்தாரி நிறுவனத்தின் சேர்மேன் டாக்டர் ரஃபீக் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் பேஷன் மையமாக தற்போது சென்னை மாறி வருகிறது. இதனை பறைசாற்றும் விதமாக பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தோல் பொருட்கள் பேஷன் ஷோ நடைபெற்றது. ‘ஐடிசி கிராண்ட் சோழா’வில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14 கண்காட்சியாளர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட மாடல்கள் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச தோல் கண்காட்சியுடன் இணைத்து இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு தோல்பொருடகளால் செய்யப்பட்ட ஆடைகள்,கைப்பைகள், ஷூக்கள், தொப்பிகள் மற்றும் பெல்ட்டுகள் ஆகியவற்றை அணிந்து மாடல்கள் ஒய்யார நடை நடந்தனர். இந்த காட்சிகள் பார்பவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்தது.
இதுமட்டுமின்றி சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்த நிகழ்ச்சியில் மாடல்களாக கலந்துகொண்டு அசத்தினர்.
இந்த நிகழ்ச்சியை Indian Finished Leather Manufacturers & Exporters Association ஒருங்கிணைத்திருந்தது. இதன் பிளாட்டினம் ஸ்பான்ஸராக கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிட்டெடும், கோல்டன் ஸ்பான்ஸராக சபா குழுமமும், சில்வர் ஸ்பான்ஸராக மைக்ரோபேக் நிறுவனமும் இருந்தன.
இந்த நிகழ்வை பாஸ்கரன் சந்திர சேகர் இயக்க ஜூட் பெலிக்ஸ் நடன இயக்கத்தை கவனித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சேர்மேன் ஜின்னா ரஃபீக் அகமது, மும்பை நகரம் இந்தியாவின் பேஷன் தலைநகரமாக திகழ்கிறது. நான் உறுதியாக கூறுகிறேன். கோத்தாரி நிறுவனமும் IUAD யும் தற்போது இணைந்திருக்கின்றன. இந்த இணைப்பு, கட்டாயம் ஒருநாள் சென்னையை இந்தியாவின் பேஷன் தலைநகரமாக்கும்” எனக் கூறினார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச தோல் கண்காட்சியுடன் இணைத்து இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டது.








