கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி பொருட்கள்மீது சுங்கவரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த ஒரே முடிவு, இந்தியாவின் தென் மாநில தொழில்துறையை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை எண்ணிப் பார்த்தால் அதிர்ச்சியே. குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறை இதயமாக இருக்கும் Coimbatore மற்றும் Tiruppur பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அளவு சில மாதங்களிலேயே 30–35% வரை சரிந்து இருக்கு.
இதனுடன், ஜவுளி துறையில் பயன்படுத்தப்படும் நூல்களின் விலை, வார்ப்பு செய்ய பயன்படுத்தப்படும் உலோகங்களின் விலை, மோட்டார் பம்ப் என மூலப்பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துள்ளதால், இந்தத் துறைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஒரு ஆண்டிற்கு மட்டும், இந்த இரண்டு மாவட்டங்களிலிருந்து சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி, இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் உலோக வார்ப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், சுங்கவரி உயர்வுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 13 பில்லியன் டாலருக்கு கீழ் குறைந்து இருக்கு. இதன்மூலம், மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஏற்றுமதி சரிந்துள்ளது.
ஒருவேளை இந்த சுங்கவரி இதேபோல் தொடர்ந்தாலோ, அல்லது மேலும் உயர்த்தப்பட்டாலோ, அமெரிக்க சந்தைக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி பெரும்பாலும் முடங்க வாய்ப்பு இருக்கு.
இதை தவிர்த்து, கோவையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு வார்ப்புகளில் 40 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்க சந்தையைச் சார்ந்து இருக்கு, அந்த வர்த்தகம் குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
பம்ப் மற்றும் வால்வு உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இந்திய சந்தையை மையமாகக் கொண்டு விற்பனை செய்து வருவதால், பெரிய அளவிலான வேலையிழப்புகள் ஏற்படாது. ஆனால், அமெரிக்க ஏற்றுமதியை மட்டும் நம்பி இருந்த சில பெரிய நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்காக, ஏற்றுமதிக்கு புதிய சந்தைகளைத் தேடுவது, மானியங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.









