வணிகம்

சீன வணிகர்களுக்கு ஸ்மார்ட் ஆப்ஷன்.. இந்தியா அதிரடி!

சீன வணிகர்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில், மின்னணு வணிக விசாவை (Electronic Business Visa) இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இந்த எலக்ட்ரானிக் வணிக விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாவை இந்திய தூதரகத்திற்கு நேரில் செல்லாமலே, முகவர்களை அணுகாமலே இணையவழியில் விண்ணப்பிக்க முடியுமென சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வணிக நோக்கத்துக்காக பல சீன வணிகர்களுக்கு இந்தியா வரவேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், விசா பெறுவதற்கான முறையை எளிமையாக்க இந்த புதிய விசாமுறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 45 முதல் 50 நாள்களில் இந்த விசா வழங்கப்படும் என்றும், இந்த விசா மூலம் சீன வணிகர்கள் இந்தியாவில் 6 மாதங்கள் தங்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக கருவிகளை நிறுவுதல், தரப்பரிசோதனை, அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் தயாரிப்பு, தகவல் தொழில் நுட்ப உள்கட்டமைப்பை அதிகரித்தல் போன்ற குறிப்பிட்ட வணிக செயல்பாடுகளுக்கு https://indianvisaonline.gov.in, https://www.nsws.gov.in/ வலைதளங்கள் மூலம் இந்த எலக்ட்ரானிக் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts