தென் மாநிலங்களில் இருந்து அதிகமான Start-up நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இதன் வளர்ச்சி அதிகளவில் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல நலத்திட்டங்கள், மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பங்கு சந்தைகளில் IPO மூலம் நிதி திரட்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என SEBI தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் DPIIT அங்கீகாரம் பெற்ற Start-up நிறுவனங்களின் மொத்தம் 1,59,157+ பதிவாகியுள்ளன. இந்த Start-up-கள் மூலம் இந்தியாவில் 2016 முதலிருந்து — 2025 வரை — மொத்தம் 16.6 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மேலும், 2025 ஜூலை நிலவரப்படி, இந்தியாவின் “unicorn” (1 billion டாலர் மதிப்புள்ள Start-up நிறுவனங்களை இப்படி செல்லபடுவதுண்டு) நிருவங்கள் தமிழத்தில் 4 உள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் Start-up எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2021–இல் சுமார் 2,032 பதிவுசெய்யபட்ட ஸ்டார்ட்-அப்கள் மட்டுமே இருந்தது. 2025இல், இந்த எண்ணிக்கை 12,171–ஐ தாண்டியுள்ளது. இதில் சுமார் 6,063 women-owned Start-ups உள்ளன. தமிழ்நாடு Start-up சூழலின் மதிப்பு சுமார் 27 billion டாலர் ஆக உள்ளது. இதனால் தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் Start-up வளர்ச்சி விகிதம், மற்ற மாநிலங்களை விட அதிகம். 2025ஆம் ஆண்டில் Start-up நிறுவனங்கள் IPO வழியாக பங்கு சந்தைக்கு வருவதற்கான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
2025ஆம் ஆண்டில் SEBI, public-listing தொடர்பான IPO விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதில் Start-ups, IPO வெளியீடு செய்யும் போது பங்குச் சந்தைக்கு செல்லும் வாய்ப்புகள் எளிதாக்கப்பட்டது. குறிப்பாக நிறுவனர்கள் வைத்திருக்கும் ESOP-களின் lock-in காலம் நீட்டிக்கப்பட்டது. இது Founders-களுக்கான listing செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது.
மேலும், IPO-வின் மூலம் பங்கு சந்தைக்கு வரும் நிறுவனங்களை — growth potential, business model, founders’ background, financials ஆகியவற்றை ஆராய்ந்து முதலீடு செய்தல் அவசியம். அதற்கிடையில், SEBI தனது IPO விதிமுறைகளை தளர்த்தி, start-ups–ஐ public listing-க்கு ஊக்கப்படுத்தியுள்ளது.








