தொழில்நுட்பம்

“இந்த App கட்டாயம்” – மத்திய அரசு!

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெற வேண்டுமென மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

உங்களோட மொபைல் தொலைஞ்சி போனாலோ திருடு போனாலா அதை எளிதாக கண்டுபிடிக்க, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட செயலிதான் சஞ்சார் சாத்தி. இந்த செயலியை பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த செயலி அனைத்து புதிய மொபைல் போன்களிலும் இருக்க வேண்டும் என்று Apple, Samsung, Vivo, Oppo உள்ளிட்ட பெரும் மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 90 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த செயலி மூலம், தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கலாம், IME மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்துகொள்ளமுடியும். மொபைலை திருடியவர்கள் அதை பயன்படுத்த முடியாதபடி நம்மால் பிளாக் செய்யவும் முடியும்.

இந்த செயலில், நம்முடைய மொபைலுக்கு வரும் மோசடி அழைப்புகள், மெசேஜுகள் குறித்த தகவலையும் தெரிந்துகொண்டு Chakshu என்ற வசதி மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் second hand mobile வாங்கியிருந்தால், அது நேர்மையாக விற்பனைக்கு வந்ததா இல்லை திருட்டு மொபைலா என்பதை, இதே செயலில் இருக்கும் know your mobile வசதி மூலம், நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த செயலின் மூலம் தரவுகளை சேகரித்து மத்திய அரசு உளவு பார்கின்றதோ என்ற சந்தேகத்தையும் பலர் எழுப்புகின்றனர். இந்த சந்தேகத்தை மத்திய அரசு தீர்க்கவேண்டியது அதன் கடமையாக இருக்கிறது.

Related Posts