தொழில்நுட்பம்

அதிகரிக்கும் பாக்கெட் Air Purifier! எதிர்க்கும் மருத்துவர்கள்

இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி போன்ற மாநிலங்களில் காற்றின் தரம் “மிகவும் மோசமான” (Severe) நிலையில் உள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதலமைச்சர் சந்தித்தபோது, அவர்கள் இருந்த அறையில் காணப்பட்ட Air Purifier சமூக வலைதளங்களில் டிரெண்டானது. பிரதமர் மோடி பயன்படுத்தும் ஏர் ப்யூரிபையரின் விலை சுமார் ரூ.14,000 என்றும், சாதாரண மக்கள் எதைப் பயன்படுத்துவார்கள் என்பதில் பலர் கமெட் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தனிநபர் அணியும் (Wearable) காற்று சுத்திகரிப்பு கருவி மீது மக்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்துள்ளது.

சிறிய NeckBand போன்ற வடிவில் கழுத்தில் அணியக்கூடிய இந்த Wearable Air Purifier-களின் விற்பனை, கடந்த ஒரு மாதத்தில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30–35% வரை அதிகரித்துள்ளது. தற்பொழுது மற்ற மாநிலங்களிலும் இதன் தேவை அதிகரித்து வருவதாக உற்பத்தி நிறுவங்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஐஐடி கான்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த சாதனங்கள் ஒருவர் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுகளை 43.8% வரை குறைக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air Air

இதுகுறித்து பல நன்மைகள் இருந்தாலும், நுரையீரல் மருத்துவர்களிடையே இதற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன. Wearable Air Purifier-கள் 40% வரை மட்டுமே நுண்துகள்களை தடுக்கும் திறன் கொண்டது, இது N95 போன்ற ஒரு சாதாரண three-ply mask-க்குக் மாதிரி தான் என கூறுகிறார்கள்.

Related Posts