நூறு ஆண்டுகளைக் கடந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம். தமிழகத்தில் உரம், கல்வி, டெக்னாலஜி, ட்ரோன் பயிற்சி மையங்கள், Non Leather shoe தொழிற்சாலை மற்றும் ”உணா வில்லா” சங்கிலித்தொடர் (chain of hotels) ரெஸ்டாரென்ட்டுகள்.. என பல்வேறு துறைகளில் KICL நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது
சென்னை நுங்கம்பாக்கம், அடையார், முகப்பேர் பகுதிகளில் ஏற்கனவே ‘உணா வில்லா’ உணவகங்கள் திறக்கப்பட்டு வெற்றிநடை போட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று (07.04.2025) இதன் நான்காவது கிளை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள எறையூரில் (திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்) கோலாகலமாக திறக்கப்பட்டது.
இந்த உணவகத்தை கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜே.ரஃபீக் அகமது திறந்து வைத்தார். ஏற்கனவே எறையூரில் ஜே.ஆர்.ஒன் கோத்தாரி நிறுவனத்தின் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டு இதில் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் எறையூரில் மற்றும் ஒரு அடையாளமாக உணா வில்லா உணவகத்தை கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜே.ரஃபீக் அகமது திறந்து வைத்துள்ளார்.









