கடந்த சுமார் நூறு ஆண்டுகளை தாண்டி இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்துவருகிறது கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்(KICL) நிறுவனம். தமிழகத்தில் உரம், கல்வி, தொழில்நுட்பம், ட்ரோன் பயிற்சி மையங்கள், Non Leather shoe தொழிற்சாலை மற்றும் ” உணா வில்லா ” என்கிற பெயரில் சங்கிலித்தொடர் (chain of hotels) ரெஸ்டாரென்ட்டுகள்.. என பல்வேறு துறைகளில் KICL நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகிறது கோத்தாரி நிறுவனம். குறிப்பாக, உணவுத்துறையில் தனக்கென புதிய முத்திரையை பதித்து வருகிறது.
இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவதில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறது. எங்கள் நிறுவன செயல் தலைவர் – டாக்டர் ஜின்னா ரபிக் அகமது, தரமான உணவு மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். புதிய யுக்திகளுடன் சங்கிலித்தொடர் ரெஸ்டாரண்டுகளை துவக்க முடிவெடுத்தார்.
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உணா வில்லா (Continental) என்கின்ற பெயரில் முதல் ரெஸ்டாரரெண்ட்டை திறந்து வைத்தார். அந்த திறப்பு விழாவின் போது செயல் தலைவர் டாக்டர் ஜின்னா ரபிக் அகமது பேசும்போது, ” 2025 வருடத்தில் மேலும் பல ரெஸ்டாரடெண்டுகளை திறப்பேன் ” என்று அறிவித்தார். அதைதொடர்ந்து, மின்னல்வேகத்தில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, இரண்டாவதாக உணா வில்லா – South indian traditional ரெஸ்டாரெண்டை அடையாரில் அண்மையில் திறந்தார். உணவுத்துறையில் அதிரடி புரட்சிகளை ஏற்படுத்தி வரும் KICL நிறுவனம் சார்பில் மூன்றாவது ரெஸ்டாரெண்ட்… அதாவது, உணா வில்லா – South indian traditional ரெஸ்டாரெண்டை முகப்பேர் மேற்கு பகுதியில் நேற்று (01.03.2025) திறந்து வைத்தார்.









