வணிகம்

FMCG ஹப்பாக மாறும் தமிழ்நாடு: ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான Reliance Consumer Products Limited (RCPL), தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அல்லிகுளம் SIPCOT தொழில்துறை பூங்காவில், 60 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,156 கோடி முதலீட்டில் ஒரு மிகப்பெரிய உற்பத்தி ஆலை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்த ஆலையில் ஒவ்வொரு மாவட்டங்களின் தனித்துவமான ஸ்னாக்ஸ், பிஸ்கட், மசாலா, ஆட்டா, தினசரி பயன்பாட்டு சமையல் எண்ணெய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மேலும் இவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 5,000-க்கும் அதிகமானோர் வேலை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை மையமாக மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய FMCG (Fast-Moving Consumer Goods) ஹப்பாக தமிழ்நாடு மாறி வரும் இந்த முன்னேற்றம், மாநில வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Posts