Tesla மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான SRAM & MRAM இணைந்து 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் மட்டுமல்ல, உலக முழுவதிலும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஜிகா தொழிற்சாலைகள் உருவாகபடவுள்ளன.
இந்த ஜிகா தொழிற்சாலைகள் என்ன செய்யப்போகின்றன தெரியுமா? மின்சார வாகனங்கள் (EV) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பேட்டரி உற்பத்தி மற்றும் சேமிப்பு மையங்கள் ஆக இயங்கும். மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் என இந்தியாவில் 8 மாநிலங்களிலும், டெக்சாஸ், புளோரிடா, கோலாலம்பூர், ஓமன், பிரேசில், UAE, ஆஸ்திரேலியா, நைஜீரியா போன்ற பல உலக நாடுகளிலும் ஜிகா தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு ஆலையும் 500 ஏக்கர் பரப்பளவில் இருக்கும், ஒரு தொழிற்சாலையில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அப்படி பார்த்தால், இந்தியாவில் அமையவுள்ள தொழிற்சாலைகள் மூலம் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான ஆலைகளின் வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானம் உள்ளிட்டவற்றை Tesla நிறுவனம் பார்த்துகோள்ளும், அரசாங்க ஒப்புதல்கள், மானியங்கள், வரிச்சலுகைகள், உள்ளூர் கூட்டாண்மைகள் போன்றவற்றை SRAM & MRAM நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து Tesla தலைவர் நந்தா கே. பாகி கூறியதாவது,”இது சாதாரண தொழிற்சாலை திட்டமல்ல… வருங்கால சமூகத்திற்கு நிலையான எரிசக்தியை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கம்!” என்றார்.









