வணிகம்

குறையும் Car, Bike விலை… தீபாவளிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

பயணியர் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதான GST-யை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் புதிதாக விற்க்கபடும் பயணியர் வாகனங்களுக்கு 28% GST விதிக்கப்படுகிறது. இதைத் தவிர, வாகனத்தின் எஞ்சின் திறன் மற்றும் அதன் அளவைப் பொறுத்து 1% முதல் 22% வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதனால் செலுத்த வேண்டிய மொத்த வரி 50% வரை அதிகரிக்கிறது.

மின்சார கார்களுக்கு தற்போது கூடுதல் வரி எதுவும் இல்லை; மற்ற கார்களை விட 5% குறைந்த வரியே விதிக்கப்படுகிறது. 350 CC வரை எஞ்சின் திறன் கொண்ட பைக்குகளுக்கு 28% ஜிஎஸ்டி ஆகும், கூடுதல் வரி இல்லை. ஆனால், 350 CCக்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட மாடல்களுக்கு 3% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், GST-யில் முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: “இந்த தீபாவளிக்கு, நீங்கள் ஒரு மிகப்பெரிய பரிசைப் பெறப் போகிறீர்கள். பயணியர் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனப் பிரிவுகளில் உள்ள தொடக்க நிலை மாடல்களுக்கு GST குறைப்பு உள்ளிட்டவை அதில் அடங்கும்.”

செப்டம்பரில் நடைபெறவுள்ள GST கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டு, தீபாவளிக்கு தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts