வணிகம்

“2030க்குள் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக KICL மாறும்” – நிறுவன தலைவர்

கோத்தாரி இன்டஸ்ட்ரீயல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம், Footwear Dealers Meet நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.

Zodiz, Jeetlo பிராண்டுகள் மற்றும் அவற்றின் துணை பிராண்டுகளை சமீபத்தில் கோத்தாரி நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஆகஸ்ட் 17) Footwear Dealers Meet நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள KICL நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோத்தாரி நிறுவன தலைவர் ஜே. ரஃபீக் அகமது, Dr.என்.மோகன்- இயக்குநர் KICL (தலைமை நிர்வாக அதிகாரி- காலணி வணிகம்), முஸ்தபா யாசின் – ஆலோசகர் KICL (உள்நாட்டு பிராண்டுத் தலைவர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய Dr.என்.மோகன், கோத்தாரி ஃபுட்வேர் எதிர்கால வளர்ச்சி திட்டங்களைப் பற்றி விளக்கினார். தமிழகத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கத்தாரில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

KICL

பின்னர் பேசிய கோத்தாரி நிறுவன தலைவர் ஜே. ரஃபீக் அகமது, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக KICL மாறும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இது நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள், வியாபாரிகள் மற்றும் நிறுவனத்துக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்றும், தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்றும் Dr.என்.மோகன் தெரிவித்தார்.

Related Posts