வணிகம்

2026 மத்திய பட்ஜெட்: ட்விஸ்டுக்கு காத்திருக்கும் இந்திய ரியல் எஸ்டேட்

2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறை மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நடுத்தர மக்களுக்கு வீடு என்பது வெறும் சுவர், கூரை மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் கனவு, பாதுகாப்பு மற்றும் எதிர்கால நம்பிக்கை என கூட சொல்லலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடுகளுக்கான தேவை அதிகரித்திருந்தாலும், 2026 மத்திய பட்ஜெட்டில் புதிய மானியங்களை விட, நிலையான வளர்ச்சியைத் தரும் திட்டங்களே முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் மானியங்கள் தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், ஆனால் ஒரு துறைக்கு நீண்ட கால முன்னேற்றம் கொடுக்க முதலீடுகள் மிகவும் முக்கியம். அதனால் தான் இந்த ஆண்டின் பட்ஜெட்டில் முதலீடுகளை உயர்த்தும் மாற்றங்கள் வர வேண்டும் என ரியல் எஸ்டேட் துறையினர் வலியுறுத்துகின்றனர். இது டெவலப்பர்களுக்கு மட்டுமல்ல, வீடு வாங்க ஆசைப்படும் நடுத்தர குடும்பங்களுக்கும் நம்பிக்கை தரும்.

இன்றைக்கு இந்தியாவில் சொகுசு வீடுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லட்சங்களை தாண்டி, இப்போது கோடிகளில் வீடுகளை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம், அது ஒரு நீண்ட கால சொத்தாகவும், அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுவதுதான். இந்த மாற்றமே ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை காட்டுகிறது.

இந்த சூழலில், வரி விதிப்பில் மாற்றம்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. Capital gains deadline, indexation benefits போன்ற விஷயங்களில் நிலையான விதிமுறைகள் இருந்தால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில், பெரிய மற்றும் முக்கிய திட்டங்களை உருவாக்க டெவலப்பர்களும் முன்வருவார்கள். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகி, நகர்ப்புற வளர்ச்சியும் வேகம் அடையலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் உலக முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்கி முதலீடுகளை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், பட்ஜெட்டில் அவர்களுக்கு சாதகமான முடிவுகள் வந்தால், இந்திய ரியல் எஸ்டேட் துறை மேலும் வலுவடையும். இந்த ஆண்டின் பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய மாற்றங்கள் வரும் என முதலீட்டாளர்களும், டெவலப்பர்களும் எதிர்பார்கின்றனர்.

Related Posts