போதைப் பொருள் இல்லா எதிர்காலத்தை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திவுதிடலில் Council for Leather Exports (CLE) சார்பில் “போதையில்லாத சமூகம்” என்ற தலைப்பில் “Soles for Souls” மாரத்தான் இன்று நடைபெற்றது.
இந்த மரத்தான் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக இருந்த சிறப்பாக நடத்தியதற்காக பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றது கோத்தாரி இன்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) மற்றும் கிக்கர்ஸ் நிறுவனங்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜே.ரபீக் அகமது, “Council for Leather Exports ஒவ்வொரு ஆண்டும் இப்படிப் பட்ட மாரத்தான்களை நடத்துகிறது. கடந்த ஆண்டு கோத்தாரி நிறுவனம் சாதாரண ஸ்பான்சராக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முக்கிய டைட்டில் ஸ்பான்சராக மாறியுள்ளது. கடந்த ஆண்டு 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் பங்கேற்றனர். அடுத்த ஆண்டும் கோத்தாரி நிறுவனம் இந்த மாரத்தானுக்கு முக்கிய ஸ்பான்சராக இருக்கும் என அவர் உறுதியளித்தார்.

மேலும், “போதை பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்காக கோத்தாரி நிறுவனம் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கும் என்றும், காலனித்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.
இந்த போட்டி 3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கோத்தாரி நிறுவன தலைவர் ஜே.ரபீக் அகமது பரிசுகளை வழங்கினார். இதில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள், குழந்தைகள் என மொத்தம் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திவுதிடல் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கிய மாரத்தான், பெரியார் பிரிட்ஜ், தாமஸ் மன்றோ சிலை வழியாக சென்று மீண்டும் திவுதிடலில் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீ-ஷர்ட், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.









