பொது

ரூ.2,350 கோடி வருமானம் – தொடர்ந்து முதலிடத்தில் ரொனால்டோ

போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாஸர் அணிக்காக விளையாடி வருகிறார். உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்து, தனது கால்பத்து பயணத்தில் இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளார். 40 வயதிலும் சிறந்து பிட்னசோடு விலங்கும் ரொனால்டோ, தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறார். அதில் இதுவும் ஒன்று.

2025 ஆம் ஆண்டில் அவரது மொத்த வருவாய் 275 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2350 கோடி) எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட $15 மில்லியன் அதிகம். இதில் 225 மில்லியன் டாலர் கால்பந்து போட்டிகளில் கிடைத்த வருவாய், 50 மில்லியன் டாலர் ஸ்பான்சர்கள், ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து கிடைத்த வருவாய். இன்ஸ்டாகிராம், யூடியுப் என்று சோசியல் மீடியாவில் மில்லியன்களில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் ரொனால்டோ, சமூக ஊடகங்களில் ஒரு போஸ்டுக்கு கோடிகளில் சம்பதிக்கிறார்.

இந்த விளையாட்டு வீரர்கள் லிஸ்டில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஸ்டீபன் கரி 156 மில்லியன் டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஷோஹெய் ஓஹ்தானி, லெப்ரான் ஜேம்ஸ், லியோனல் மெஸ்ஸி மற்றும் கெவின் டுரான்ட் ஆகியோருடன் ஒப்பிடுகையில், ரொனால்டோவின் வருவாய் அதிகமாகவே உள்ளது.

ஃபோர்ப்ஸ் இதுவரை வெளியிட்ட அனைத்து பட்டியல்களிலும், ரொனால்டோவுக்கு மேல் ஒரே வீரர் மட்டும் உள்ளார். அவர் பெயர் ஃபிலாய்ட் மேவேதர். அவர் 2015இல் 300 மில்லியன் டாலரும், 2018இல் 275 மில்லியன் டாலரும் சம்பாதித்துள்ளார்.

ரொனால்டோவின் வாழ்கையில் ஒரு முக்கிய காலம் 2022, அந்த வருடம் டிசம்பரில் அல்-நாஸர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது வருமானத்தில் ஒரு முக்கிய பங்கு அல்-நாஸர் அணியில் இருந்துதான் கிடைக்கிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து, தன்னுடைய உழைப்பால் மட்டுமே இவ்வளவு உயரத்தை எட்டியுள்ள ரொனால்டோ, கால்பந்து வீரராக மட்டும் அல்லாமல் உலகின் முன்னணி பிரபலமாகவும் மாறியுள்ளார். அவரது பயணம் வெறும் சாதனைகள் அல்ல. பல தலைமுறையினருக்கு கால்பந்து மீதுள்ள ஆர்வத்தை தூண்ட அது ஒரு தொடக்கம்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts