பொது

இந்தியா-ஸ்லோவேனியா இடையே வர்த்தகம், முதலீடுகள் குறித்து ஆலோசனை!

  • இந்தியா-ஸ்லோவேனியா வர்த்தக உறவை மேம்படுத்த ஆலோசனை! பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கு உறுதி
  • தில்லியில் இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்

புது தில்லி: இந்தியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து புதன்கிழமை (நவம்பர் 26) விரிவான ஆலோசனை மேற்கொண்டன.

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின் 10-வது ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இச்சந்திப்பில், இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து வேளாண்மை, ரசாயனம், மருந்து உற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உற்பத்தி, சுற்றுலா, குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (MSME), ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA), சமமான மற்றும் பரஸ்பர பலனளிக்கும் வகையில், விரைந்து இறுதி செய்ய இருதரப்பும் நம்பிக்கை தெரிவித்தன. (ஸ்லோவேனியா ஐரோப்பிய யூனியனில் ஓர் உறுப்பு நாடாகும்).

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து மத்திய அரசின் பிஐபி குறிப்பு வெளியிட்டுள்ளது.

Related Posts