சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அவருடைய உரையின் முக்கிய அம்சங்கள்:
* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.நுண்ணீர் பாசனத்திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இ-வாடகை செயலி மூலம் 3,816 வேளாண் இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் கடன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள், ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. உழவர் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவு தினமும் அதிகரித்து வருகிறது. உரம், விதைகளை வழங்க ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பழம், காய்கறி பரப்பு சாகுபடியை விரிவாக்கம் செய்ய அரசு ஊக்குவிக்கிறது.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கம்பு சாகுபடி பரப்பளவு 1.33 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.175 கோடி நிதி பெற்றுள்ளனர்.கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு.எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. துவரை சாகுபடி விரிவாக்க இயக்கம் மூலம் ரூ.66 கோடியில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
* புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
* 2021-22ம் ஆண்டு முதல் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி மதிப்பிலான பனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 650 மகளிர்க்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் மூலம் 1.45 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது.
* கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடருக்காக ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3002 கோடி வழங்கப்பட்டுள்ளது.பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது. அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெ.டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 70 ஆயிரம் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்.
* தமிழ்நாடு அரசின் வேளாண் காடுகள் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. 58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 10,588 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
* புவிசார் குறியீட்டுக்காக 41 விலைப்பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
* உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.ரூ.1600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
* 150 விவசாயிகள் அயல் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.








