பொது

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்: சனே தகைச்சி தேர்வு!

ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவர் தேர்தலைத் தொடர்ந்து, முன்னாள் பொருளாதாரப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த சானே தகைச்சி, நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 64 வயதான இவர், ஜப்பானின் வரலாற்றில் பிரதமராகப் பதவியேற்கும் முதல் பெண் என்ற மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்.

இன்று (அக்டோபர் 21, 2025) ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அதிக வாக்குகளைப் பெற்று சானே தகைச்சி வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் ஜப்பானின் 104-வது பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.

சானே தகைச்சியின் இந்தப் பதவி உயர்வு, முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீரெனப் பதவி விலகியதைத் தொடர்ந்து நிகழ்ந்தது.

இந்தத் தோல்விக்கான காரணம் என்னவென்றால், விலைவாசி உயர்வு, யென் மதிப்பு சரிவு மற்றும் தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட மக்கள் அதிருப்திக்கு இவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே மூத்த தலைவர்கள் மற்றும் வலதுசாரி பிரிவினரிடமிருந்து கடும் அழுத்தம் ஏற்பட்டது.

கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, ஷிகெரு இஷிபா செப்டம்பர் 7, 2025 அன்று தனது பிரதமர் மற்றும் LDP தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.

இஷிபாவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக LDP கட்சிக்குள் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், சானே தகைச்சி, பல சுற்றுகளுக்குப் பிறகு, அக்டோபர் 4, 2025 அன்று, LDP கட்சித் தலைவராக வெற்றி பெற்றுப் பொறுப்பேற்றார். இதன் தொடர்ச்சியாக, இன்று அவர் நாடாளுமன்றத்தில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Related Posts