இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ, அதே அளவு ஆர்வம் மகளிர் கிரிக்கெட்டில் இருக்கிறதா என கேட்டால்… இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க பல முயற்சிகளை ஐசிசி எடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்த பரிசுத்தொகை ரூ.122.50 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்கள் உலகக் கோப்பைக்கு பரிசுத்தொகை அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத்தொகை தான் அதிகம். வெற்றி பெறும் அணிக்கு ரூ.39.95 கோடி வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை சமீபத்தில் ஐசிசி அறிவித்தது. முதல் கட்டமாக டிக்கெட்டின் விலை ரூ.100 ஆக நிர்ணயித்துள்ளது. இதை கேட்டதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆண்கள் உலகக் கோப்பைக்கான டிக்கெட் விலை ரூ.2,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும். அதற்கு மாறாக மகளிர் உலகக் கோப்பைக்கான டிக்கெட் ரூ.100 ஆக இருப்பது, மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நல்ல முடிவு என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதற்கான டிக்கெட் விற்பனை வரும் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆனால், சென்னை சேப்பாக்கத்தில் எந்தப் போட்டியும் நடத்தப்படவில்லை என்பது, தமிழ்நாட்டு ரசிகர்களின் கவலை









