பொது

ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டாவுக்கு டும் டும் டும்…

தென்னிந்திய சினிமா நடிகை ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாகப் பேசப்பட்டு வந்தது. இந்தக் காதல் கதை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் கடந்த மாதம் ஹைதராபாத்தில் மிக ரகசியமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, வெளியே யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாகக் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், நடிகை ராஷ்மிகாவின் விரலில் மின்னிய வைர மோதிரம் இந்தத் தகவலை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது.

சமீபத்தில் ஒரு தெலுங்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராஷ்மிகா பங்கேற்றபோது, அந்த மோதிரத்தைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இது என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம்” என்று புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல் என்னவென்றால், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்களாம். இவர்களது திருமணம், ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவுள்ளன.

இந்தச் செய்தியால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

Related Posts