பொது

என்ன டா இது… டிராவிட் மகனுக்கு வந்த சோதனை: ஏலத்தில் விலை போகாததற்கு காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியில் லெஜண்டாக வலம் வந்தவர் ராகுல் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் பேட்டிங் செய்ய வந்தாலே எதிர் அணிகள் அவரை அவுட் ஆக்க திணறுவார்கள். இதனால் இவரை “The Wall” என ரசிகர்கள் செல்லமாக அழைப்பர். இப்படிப்பட்ட ராகுல் டிராவிட்க்கு, தற்போது ஒரு சோதனை வந்துள்ளது. அவரது மகன் சமித் டிராவிட், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை தேடி வருகிறார். ஆனால் நேற்று நடைபெற்ற மகாராஜா கோப்பைக்கான வீரர்கள் ஏலத்தில், அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

2022ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் (KSCA) நடத்தி வரும் மகாராஜா கோப்பை T20 தொடரின், 2025 ஆண்டுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த தொடரில் 6 அணிகள் விளையாடும் போட்டிகள் ஆகஸ்ட் 11 முதல் 27ஆம் தேதி வரை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளன. வீரர்களை தேர்வு செய்யும் இந்த ஏலத்தில், நடப்பு IPL சாம்பியன்களான RCB அணியின் வீரர் தேவ்தத் படிக்கலை, ஹூப்ளி டைகர்ஸ் அணி அதிகபட்சமாக ₹13.20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

டிராவிட்

இந்திய முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், 2024 ஆம் ஆண்டு கூச் பெஹர் கோப்பையில் கர்நாடகாவுக்காக 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகள் எடுத்து கவனம் பெற்றார். ஆனால் அதன்பிறகு அவரது ஆட்டநிலை சரிவை சந்தித்தது. 2024-இல் ₹50,000க்கு மைசூர் வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமித், 7 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்கு எதிரான 33 ரன்கள் தான் அவரது அதிகபட்ச ஸ்கோர். இதன் காரணமாக இந்த ஆண்டு ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்க விருப்பம் காட்டவில்லை.

இந்தியாவின் முன்னாள் வீரர்கள் தங்கள் மகன் மகள்களை எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க Special பயிற்சி அளித்தும் பலருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்க வில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்டின் மகன்கள் சமித் மற்றும் வேதாந்த் டிராவிட், விரேந்தர் சேவாகின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோரும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க காத்திருக்கின்றனர்.

டிராவிட்

அதேபோல், சஞ்சய் பங்கர் மகள் அனயா பங்கர், சுனில் கவாஸ்கர் மகன் ரோஹன் கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகன் அனிருத்து ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் வாய்ப்பு பெற்றாலும், நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை.

Related Posts