வணிகம்

டிவிஎஸ் ஐகியூப் உற்பத்தி 10 லட்சத்தை எட்டியது..

இந்த நிகழ்வு இந்தியா உறுதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கும், போக்குவரத்தும் ஏற்ற முறைக்கு வேகமாக மாறி வருவதை பிரதிபலிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவின் மின்சார வாகன வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கிறது. உள்நாட்டு பொறியியல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் தொடர்ந்து முதலீடு செய்து மின்சார வாகன வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது.
இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டர், உலகத் தரத்திலான தரம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை இந்திய தொழில்நுட்ப திறனுடன் இணைக்கும் தயாரிப்பாக விளங்குகிறது.

இது குறித்து டிவிஎஸ், தலைவர் சுதர்ஷன் வேணு கூறுகையில், “10 லட்சம் டிவிஎஸ் ஐகியூப் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்பது, மின்சார போக்குவரத்து இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருவதை காட்டுகிறது. உலகத் தரத்திலான மின்சார வாகனங்களை இந்தியாவில் உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால முதலீடுகளின் பலனாக இந்த சாதனை கிடைத்துள்ளது.

‘விக்சித் பாரத்” எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பத்தில் உலகளாவிய அளவில் முன்னணி நாடாக உருவாக இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. 2020-ஆம் ஆண்டு அறிமுகமான டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டர், இன்று இந்தியாவின் விரும்பப்படும் மின்சார ஸ்கூட்டர் பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குடும்பப் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையிலும், மின்சார வாகனமாகவும் இது பிரபலமடைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு பேட்டரி திறன்கள், ஓட்டுநர் விருப்பங்களளுக்கு ஏற்றார் போல் இந்த ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

டிவிஎஸ் ஐகியூப் விற்பனை நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிகமான விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மின்சார வாகனங்கள் அதிகமாக மக்களை சென்றடைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டர் பயனர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது. அறிமுகமானதிலிருந்து இதுவரை டிவிஎஸ் ஐகியூப் வாகனங்கள் மொத்தமாக 1494 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணித்துள்ளன. இதன் மூலம் சுமார் 5.23 லட்சம் டன் கார்பன் டைஆக்சைடு (CO₂) வெளியேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த கார்பன் சேமிப்பு, சுமார் 2.09 கோடி மரங்களை நடுவதற்கு இணையான சுற்றுச்சூழல் நன்மையை உருவாக்கியுள்ளது.

தனிநபர்களின் போக்குவரத்து தேர்வுகள், இந்தியாவின் நிலையான வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்ற இலக்குகளை அடைய முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதை இந்த சாதனை எடுத்துக்காட்டுவதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது

Related Posts