பொது

Body Cool-ஆக இருக்க நீங்கள் Water எவ்வளவு குடிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க!

தண்ணீர் இல்லாமல் நாம் ஒரு நாளும் வாழ முடியாது. உணவில்லாமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில மணிநேரங்கள்கூட இருக்க முடியாது. உடலில் பல மாற்றங்கள் இந்த தண்ணீர் குறைபாடால் ஏற்படத் தொடங்கும். நம் உடலில் சுமார் 60% வரை தண்ணீரே உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இதற்கான பதில் ஒரே மாதிரியானதல்ல வயதுக்கும், செயல்பாடுகளுக்கும் ஏற்ப மாறுகிறது. வயதுக்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை இங்கேப் பார்ப்போம்.

1 முதல் 8 வயது குழந்தைகள்: விளையாடும் குழந்தைகள் உடல் வியர்வை மூலம் அதிக தண்ணீரை இழக்கிறார்கள். எனவே, தினமும் 4 முதல் 5 கப் (சுமார் 1 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த பழக்கத்தை சிறுவயதிலிருந்தே உருவாக்குங்கள்.

9 முதல் 13 வயது பிள்ளைகள்: பள்ளிப்படிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதால், தினமும் 6–7 கப் (சுமார் 1.5 லிட்டர்) தண்ணீர் அவசியம். இது உடலை புத்துணர்வாக வைத்திருக்க உதவும்.

14 முதல் 18 வயது இளையோர்: இது வளர்ச்சி நடைபெறும் முக்கியமான பருவம். இந்த வயதில் தினமும் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

19 வயதுக்கு மேற்பட்டோர்: தினமும் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வேலை, பயணம், உடற்பயிற்சி ஆகியவையால் கூடுதலாக நீர் தேவைப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: உடல் இளைக்காமல், சிறுநீரக செயல்பாடுகள் சீராக இருக்க தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக வெயிலில் வேலை செய்யும் அல்லது உடற்பயிற்சி செய்யும் நபர்கள் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

தாகம் வரும் வரை தண்ணீர் குடிக்க காத்திருக்க வேண்டாம், முன்பே குடிக்க பழகுங்கள்.

காபி, டீ போதுமா? இல்லவே இல்லை! இவை தாகம் தீர்க்கலாம், ஆனால் உண்மையில் உடலை ஈரப்படுத்தும் (hydrate செய்யும்) சக்தி தண்ணீருக்கே உண்டு.

Related Posts