பொது

‘சூர்யா 46’ படத்தில் நடிக்கும் KGF நடிகை!

லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா தற்போது தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்தப் படத்தில் தற்போதைக்கு ‘சூர்யா 46’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், கே.ஜி.எஃப் பட புகழ் நடிகை ரவீனா தாண்டன் இணைந்திருக்கிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு நேற்று சிறப்பான போஸ்டர் வெளியிட்டு இதை உறுதி செய்தது. ரவீனா தாண்டன் இதற்கு முன்  ‘சாது’ மற்றும் ‘ஆளவந்தான்’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘கருப்பு’ படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களைப் பற்றிய மேலும் பல அப்டேட்களுக்காக காத்திருங்கள்.

Related Posts