பொது

புத்தகம் படித்தால் Extra Mark: கேரளாவில் புதிய முயற்சி

புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இப்போது எல்லோரின் கையிலும் மொபைல்போன் வந்துவிட்டது. ஒரு வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை அனைவரும் மொபைல் பயன்படுத்துகிறார்கள். இப்பொழுது தகவல் தெரிந்து கொள்ள புத்தகம் தேவை இல்லை; இரண்டு கிளிக் செய்தால் வீடியோவாகவோ ஆடியோவாகவோ அனைத்தும் கிடைத்து விடுகிறது. இது ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும் இதனால் பல தீமைகளும் உண்டு. நமது மூளையின் யோசனை திறனை குறைத்து, வாசிப்பு பழக்கம் மெல்ல மெல்ல அழித்து வருகிறது.

அதிலும், பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மிகவும் அவசியம். அதைச் சரிசெய்து வாசிப்பு பழக்கத்தை மீண்டும் அதிகரிக்கும் வகையில் கேரள அரசு ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. அதன்படி, பள்ளி நேரத்தில் தனி வகுப்பு ஒதுக்கப்படும். 1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் பாட புத்தகம் இல்லாத புத்தகங்களை படிக்க வேண்டும்; 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் செய்தித்தாள் படிக்க வேண்டும். இப்படிச் செய்யும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் முன் ஆசிரியர்களுக்கும் தேவையான பயிற்சி அளிக்கப்படும். வாசிப்பு பழக்கத்தை மீண்டும் மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.

இது நடைமுறையில் சில சிக்கல்களை கொண்டுள்ளதால் அதற்கு சில விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. கருணை மதிப்பெண்களைப் பெறுவதற்கான மட்டும் வாசிப்பை மாணவர்கள் பார்த்துவிட்டால் என்னவாகும்? படிப்பதற்கு மதிப்பெண்கள் ஒரு உந்துதலாக தான் இருக்க வேண்டும் என்பது பலரின் கல்வியாளர்களின் கருத்து.

Related Posts