பங்கு சந்தை

மிகப்பெரிய IPOவாக உருவெடுக்கிறது ஜியோ…

இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடாக உருவெடுக்க உள்ளது ஜியோவின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO). இந்த வெளியீட்டின் மூலம், விலைப்பட்டையின் அதிகபட்ச விலையில் சுமார் ரூ.30,213 கோடி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு பங்கின் விலையை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்க ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த IPO-வில் அதிகபட்சமாக 27 கோடி ஈக்விட்டி பங்குகள் புதிதாக வெளியிடப்பட உள்ளன.

இதன் மூலம், 2024-ஆம் ஆண்டு ரூ.27,870 கோடி திரட்டிய ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் IPO சாதனையை ஜியோ முறியடிக்க உள்ளது. மேலும், தகுதியுள்ள ஊழியர்கள் IPO-வில் பங்கேற்கும் வகையில், ஒரு ஈக்விட்டி பங்குக்கு ரூ.54 தள்ளுபடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விண்ணப்ப அளவு 12 ஈக்விட்டி பங்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் 12 பங்குகளின் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்.
(Bid Lot: 12 Equity Shares and in multiples of 12 Equity Shares thereafter.)

இந்த IPO அக்டோபர் 21, 2026, புதன்கிழமை தொடங்கி, அக்டோபர் 23, 2026, வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. Anchor Investors-களுக்கான ஏலச் செயல்முறை அக்டோபர் 19, 2026, திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் பங்கு வெளியீட்டில், தகுதியுள்ள ஊழியர்களுக்காக ரூ.500 கோடி வரையிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தகுதியுள்ள பங்குதாரர்களுக்காக ரூ.2,500 கோடி வரையிலும் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

Related Posts