பங்கு சந்தை

ஜியோ IPO வெளியான சில மணி நேரங்களிலேயே முழு சந்தாவும் பெறப்பட்டது..

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (JIO Platforms) நிறுவனத்தின் ரூ.30,213 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO), புதன்கிழமை சந்தாவுக்காகத் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முழுமையாகச் சந்தா பெறப்பட்டது. ஒட்டுமொத்தமாக, இந்த IPOவில் 1.22 மடங்கு சந்தா பெறப்பட்டுள்ளது.

இந்தப் பங்கு வெளியீட்டின் விலை, ஒரு பங்குக்கு ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ஆம் தேதியுடன் சந்தாவுக்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில், அதிகபட்ச விலையான ரூ.1,119-ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10.3 லட்சம் கோடியாக இருக்கிறது.

இந்த IPOவில், புதிதாக அதிகபட்சம் 27 கோடி ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் (BSE) தரவுகளின்படி, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காக (QIBs) ஒதுக்கப்பட்ட 4,90,07,827 பங்குகளுக்கு 3.77 மடங்கு சந்தா கிடைத்துள்ளது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 0.31 மடங்கும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கான (NII) ஒதுக்கீட்டில் 0.39 மடங்கும் சந்தா பெறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகள் 0.73 சதவீதம் சந்தா பெற்றுள்ளன.

இந்த IPO-வில், தகுதியுள்ள ஊழியர்கள் சந்தா செலுத்துவதற்காக ரூ.500 கோடி மதிப்பிற்கு மிகாமல் பங்குகள் ஒதுக்கப்ட்டுள்ளன. அதேபோல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தகுதியுள்ள பங்குதாரர்கள், சந்தா செலுத்துவதற்காக ரூ.2,500 கோடி மதிப்பிற்கு மிகாமல் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டுப் பிரிவில் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு, ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.54 தள்ளுபடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகள் 0.58 மடங்கு சந்தா பெற்றுள்ளன.

 

This is translated version. Click here for the original.

Related Posts