வளர்ந்து வரும் டிஜிட்டல் காலகட்டத்தில் Facebook, Whatsapp விட Instagram மற்றும் Youtube-களில் தான் அதிகபடியான GenZ கிட்ஸ் நேரத்தை செலவிடுகின்றனர்.
காலையில் எழுந்தது முதல் தூங்கும் வரை கையில் மொபைல் இல்லை என்றால் சிலருக்கு வேலையே நடக்காது. சமீபத்தில் Meta வெளியிட்ட அறிக்கையில் Instagram அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாதான் முதல் இடம். அதற்கு ஏற்ப இந்தியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது மெட்டா நிறுவனம். அடிக்கடி அப்டேட்களையும் கொடுத்து வருகிறது.
முதலில் Edit Option, Reel-களை 3 நிமிடம் வரை அதிகரித்தது, Trail Reel Option, DM Update என அப்டேட்களை அள்ளிக் குவித்துள்ளது. இந்நிலையில், Youtube-ல் உள்ளது போல இன்ஸ்டாகிராம் ‘Link a Reel’ என்ற புதிய அம்சத்தை Meta அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் நீங்கள் Post செய்யும் Reel-களுக்கு அடுத்து எந்த Reel வர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். ஒரு Series ரீல்ஸ்களை பார்க்க இந்த அம்சம் உதவும்.









