கர்நாடகாவில், காலாவதியான மாத்திரைகள் வழங்கியதாக கூறி பரப்பப்பட்ட வீடியோவால், டாக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் இன்று நம் வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியாக மாறிவிட்டது. ஒரு தகவலை சில நொடிகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாகவும் இருக்கு. ஆனால் அதே நேரத்தில், ஒரு வீடியோ அல்லது ஒரு பதிவின் மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறும் அபாயமும் இதில் இருக்கிறது.
சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கு. கேரளாவில், அரசுப் பேருந்தில் நடந்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. சில விநாடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோ, கோடிக்கணக்கான பார்வைகளைச் சென்று அடைந்தது. அந்த வீடியோவில், 42 வயது நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குறிப்பிட்டிருந்தார்.
உண்மை முழுமையாக தெரியாமல் பலர் அந்த நபரை சோசியல் மீடியாவில் திட்டித் தீர்த்தனர். அவர் என்ன சொல்ல வந்தார், உண்மை என்ன என்பதைக் கேட்கும் முன்பே, சோசியல் மீடியா அவரை குற்றவாளியாக பார்த்தது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல், கர்நாடகாவில் ஒரு மருத்துவர் குறித்து அவதூறு வீடியோ ஒன்று வைரலானது. உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் அவர்ஷா கிராமத்தைச் சேர்ந்த ராஜுபிகிலே, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருந்து வருகிறார். அவர் காலாவதியான மருந்துகளை வழங்கியதாக கூறிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோ, 15 நாட்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி வைரலானது.
டாக்டர் ராஜுபிகிலே அந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தாலும், சமூக ஊடகங்களில் பலர் அவரை திட்டியும், அவமதித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் fake அல்லது ஏமோஷன்களை தூண்டும் வீடியோக்கள் ஒருவருடைய மனநலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதுமட்டுமல்லாமல் online shaming, cyberbullying, defamation போன்றவை ஒரு மனிதனுடைய தற்கொலை எண்ணத்தை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்து இருக்கு.
2023–25 காலகட்டத்தில் வெளியான ஆய்வுகளின்படி, fake news அல்லது தவறான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி பார்க்கும் நபர்களில் 35–45% பேர் கடும் depression & anxiety போன்ற அறிகுறிகள் அதிகமாக வருகின்றதாம்.
இந்தியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக அவதூறு, வைரல் வீடியோ, online humiliation காரணமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றது. பெரும்பாலான வழக்குகளில், உண்மை முழுமையாக நிரூபிக்கப்படுவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் இவர்தான் குற்றம் சாட்டப்படுவது முக்கிய காரணமாக இருக்கு.







