பொது

வெயிலில் கறுத்து போகாமல் இருக்க இத செய்யுங்க.. தோல் மருத்துவரின் டிப்ஸ்!

தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகி இருக்கிறது. வெப்பம் காரணமாக உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாவதால் உடலில் நீர் இழப்பு, தோலில் வியர்க்குரு, Fungal Infection போன்றவை ஏற்படுகின்றன. அதிக வெப்பத்தின் காரணமாக ஒரு சிலருக்கு தோல் கருகி sunburn கூட ஏற்படுகிறது.

என்ன செய்யவேண்டும்?

வியர்க்குரு இருக்கும் இடங்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். அதனால், வியர்க்குரு இருப்பவர்கள் ஒரு நாளில் இரண்டு முறையாவது குளிக்கவேண்டும்; காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். வியர்குருவை போக்கும் Lotion போன்றவற்றை உபயோகிக்கலாம். பெருபாலானோர்க்கு வியர்வை காரணமாக தொடை இடுக்குகளில் Fungal Infection ஏற்பட வாய்ப்புள்ளது. Fungal Infection ஏற்பட்டால், Steriod இல்லாத Antifungal  oinment, powder போன்றவற்றை பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் போட்டுக்கொள்ளலாம். தொற்று சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகவேண்டும்.

உடலில் Sunburn  ஏற்படாமல் இருக்கவும் தோல் கறுப்பாகாமல் இருக்கவும் Sunscreen பூசிக்கொள்வது அவசியம். Sunscreenல் SPF 50 முதல் 80 இருந்தால் சிறந்தது. மேலும், பழங்கள் சாப்பிடுவது, பழச்சாறு அருந்துவது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) வெயிலினால் தோல் பாதிப்படைவதை தடுக்கிறது. நிறைய தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை உச்சிவெயில் பொழுதில் வெளியில் செல்லாமல் இருத்தல், குடை, கூலிங் கிளாஸ் போன்றவற்றை பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும்.

Dr. Annie Flora. G

Dermatologist

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts