பொது

நடிகை வேதிகாவின் பெயரில் சைபர் மோசடி

நடிகை வேதிகாவின் பெயரையும் அடையாளத்தையும் பயன்படுத்தி, ஒரு மர்ம நபர் பொதுமக்களுடன் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்புகொண்டு பேசிவருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சியான தகவல் குறித்து, நடிகை வேதிகா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அவசர பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை வேதிகாவின் புகைப்படங்களையும், பெயரையும் பயன்படுத்தி போலியாக மக்களிடம் பேசிப் பழகுவதாக சிலர் வேதிகாவுக்கு நேரடியாகத் தெரியப்படுத்தியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வேதிகா, உடனடியாக ஒரு முக்கியமான எச்சரிக்கையை அவரது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளார்.

அந்த மர்ம நபர் பயன்படுத்தும் போலியான எண்ணிலிருந்து பொதுமக்களுக்கு ஏதேனும் Phone Call அல்லது Message வந்தால், தயவுசெய்து அதை உடனடியாகவும், கட்டாயமாகவும் பிளாக் செய்யுமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது ஒரு சைபர் மோசடி என்பதால், நடிகை வேதிகா இந்த விஷயம் குறித்து சைபர் கிரைம் போலீஸில் அதிகாரப்பூர்வமான புகார் அளித்திருப்பதாகவும் தனது பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் இதுபோன்ற போலியான அழைப்புகளைத் தவிர்த்து, கவனமாக இருக்குமாறு நடிகை வேதிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts