வணிகம்

கரூரில் எவர்வன் கோத்தாரி காலணி ஆலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் அடிக்கல் நாட்டுகிறார்

கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனம், தனது பீனிக்ஸ் கோத்தாரியின் ஒரு பிரிவான எவர்வன் கோத்தாரி காலணி நிறுவனத்திற்கு கரூர் மாவட்டம் மாயனூரில் புதிய உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாளை நாட்டப்ப டுகிறது. இது காலணி உற்பத்தி துறையில் குறிப்பிடத்தக்க முயற்சியாக இருக்கும்.

இது முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் தொடங்கப்படும் முதல் முக்கிய தனியார் துறை முதலீட்டுத் திட்டம். இது தமிழ்நாட்டின் காலணி உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளிக்கும்.

இத்திட்டம் தமிழ்நாட்டின் காலணி உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மத்திய பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரஃபிக் அகமது தலைமையில் உருவாக்கப்படும் இத்திட்டம் தொழில் வளர்ச்சி, நவீன உற்பத்தி, புதிய தொழில்நுட்பம், தரம், புதுமை ஆகியவற்றில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

உலகத் தரத்திலான உற்பத்தி முறைகளைப் பின்பற்றி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படவுள்ள இந்த ஆலை, உயர்தர காலணிகள் உற்பத்தியில் முக்கிய பங்காற்றும்.

இந்த முதலீட்டின் மூலம் தொழில் வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை முன்னணி காலணி உற்பத்திக்கு ஒரு வித்தாக மாற்றும் முயற்சியாக இருக்கும்.

இந்த புதிய உற்பத்தி ஆலை, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், மாநிலத்தின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts