பொது

குறை தீர்க்கும் முகாமில் எஸ்.ஐ.க்கு அட்வைஸ் சொன்ன ஐ.ஜி.

மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். அவரது ஆபீஸ் வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமை நடத்தி வருகிறார். இதில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை மனுவாக கொடுத்து வருகின்றனர்.

பொதுமக்களின் மனுவை பெற்றுக் கொண்ட ஐ.ஜி., ஏற்கனவே அங்கிருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அங்கேயே அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒருபுறம் பொதுமக்களும் மறுபுறம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆக அந்த ஆபீஸ் வளாகம் நிறைந்திருக்கிறது.

இதில் சிவில் வழக்கு சம்பந்தமாக ஒரு தம்பதியினர் மனு கொடுக்க வந்துள்ளனர். இவர்களிடம் குறைகளை கேட்ட ஐஜி, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை அழைத்து நான் வரும் வரையில் இந்த பிரச்சனைக்காக இவர்களை காத்திருக்க வைப்பீர்களா? கோர்ட் ஆர்டர் இல்லாமல் இந்த சிவில் பிரச்சனையில் நாம் எதுவும் செய்ய முடியாது என்று அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாதா? என எஸ்.ஐ. இடம் சீரியஸாக கேட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் கோர்ட் ஆர்டர் வரும்வரை எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று சொல்லி அந்த தம்பதிக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

Related Posts