பொது

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு இனி No Entertainment!

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் YouTube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் கூறும்போது, “16 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் பத்தில் நான்கு பேர் YouTube-ல் ஆபாச வீடியோக்களைப் பார்க்கின்றனர். சமூக ஊடகங்கள், குழந்தைகளின் மனநலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம் அதனால் தான் இந்த தடை விதித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனீ அல்பனீசி, “குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்” என கூறினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு, 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் Facebook, TikTok, Instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையிலிருந்து YouTube-க்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. காரணம், வகுப்பறைகளில் பாடங்களை கற்பிக்க பயன்படும் தளமாக இருந்ததாலே அந்தத் தளத்திற்கு விலக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிக படியான குழந்தைகள் இதனை தவராக பயன்படுத்துகின்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

இந்த கட்டுபாட்டை மீறினால் YouTubeக்கு கடும் அபராதம் விதிக்கபடும். மேலும் இதுபோன்ற கட்டுபாட்டுகளை மீறியதற்காக Facebook, Instagram, Snapchat, மற்றும் X ஆகிய நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக 32.2 மில்லியன் டாலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய தடை வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts