பொது

42 கிலோ எடையை குறைச்சிருக்கேன்… ரசிகர்களை மோட்டிவேட் செய்யும் அஜித்!

ரேஸிங் செய்வதற்காக 42 கிலோ இடையை குறைத்திருப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே அஜித் குமார் கார் ரேஸிங்கில் பல சாதனைகளை செய்துவருகிறார். அவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதும் கொடுத்தது.

இந்நிலையில் இயக்குநர்களும் தயாரிப்பார்களும் தன்னுடைய தொலைநோக்கு பார்வையை சரியாக புரிந்துகொண்டிருப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தான் அதிர்ஷ்டசாலி என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும், அது சிறப்பான தரமான படமாக அமையும் என்றும், வரவிருக்கும் நவம்பரில் ஒரு படம் துவங்க இருப்பதாகவும் ரசிகர்களுக்கு அப்டேட் தந்திருக்கிறார்.

“ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க போவதில்லை. ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன். ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையைக் குறைத்தேன். என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அர்ப்பணிக்க வேண்டும்” என்று சொல்லி தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேசனாக  நடிகர் அஜித்குமார் மாறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts