நடிகர் அஜித் குமாருக்கு கார் ரேஸ் மீது எவ்வளவு ஆர்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சினிமாவில் அவருக்கென்று ஒரு பெரிய இடமும், ரசிகர்களின் அளவற்ற பாசமும் ஆதரவும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர் என்ன செய்திருக்கிறார் என்றால்… இந்திய சினிமாவை உலகளவில் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒரு லோகோவை வடிவமைத்து, அதைத் தனது ரேஸிங் லோகோவாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
அஜித் குமார் தனிப்பட்ட முறையில் ஒரு ரேஸிங் டீம் வைத்துள்ளார். அந்த டீம் பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளைக் குவித்து வருகிறது.
இந்தக் குழு ஏற்கனவே துபாய், பெல்ஜியம் போன்ற பல இடங்களில் நடந்த 24H Endurance Series பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளது. அடுத்து, ஆசிய லீ மான்ஸ் தொடரிலும் அஜித் குமார் குழு பங்கேற்கவுள்ளது. இதில், தமிழ்நாட்டின் ரேஸிங் ஜாம்பவான் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து, LMP3 பிரிவில் கார் ரேஸிங்கில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் நடக்கும் கார் பந்தயங்களில், அவர் அணியும் ஆடைகளிலும், காரிலும் இந்த லோகோவுடன் தான் பங்கேற்கப் போவதாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.









