தொழில்நுட்பம்

அட இது நல்லா இருக்கே! விபத்துகளை தடுக்க AI ஹெல்மெட்

இன்றைய உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கு. அந்த வேகத்தோடு சேர்ந்து நம்ம வாழ்க்கையிலும் பல ஆபத்துகள் அதிகரித்துதான் இருக்கு. குறிப்பாக சாலைகளில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களால் பலரின் வாழ்க்கையே புரட்டிப்போடும் சம்பவங்களாக நடந்துட்டுதான் இருக்கு. இந்த சூழலில்தான் AI மூலமாக போக்குவரத்து விதிமீறல்களை தடுத்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கும் ஹெல்மட்டை பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியர் கண்டு பிடித்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பங்கஜ் தன்வார். அவர் உருவாக்கியுள்ள AI ஹெல்மெட், வெளியில் இருந்து பார்த்தால் சாதாரண ஹெல்மெட் போல்தான் இருக்கும், ஆனால் அதுக்குள்ள ஒரு கேமரா மூலமாக வண்டி ஓட்டும்போது நடக்கும் விதிமீறல்களை கண்காணித்து, அதனை புகைப்பட ஆதாரங்களை எடுத்து, அந்த லொக்கேஷன் மற்றும் வாகனப் பதிவு எண்ணுடன் நேரடியாக போலீசாருக்கு புகார் அனுப்புமாம். அதுவும் யாரையும் விரட்டாமல், சண்டை போடாமல் அமைதியாகதன் பணியை செய்யும்.

யாரவது சாலையில் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் போன அந்த நபரை இந்த AI ஹெல்மெட் துல்லியமாக கண்டறிந்து, சிவப்பு வட்டம் இட்டுக் காட்டுகிறது. காரின் சன்ரூப்பில் நின்று கொண்டு பயணித்த நபரையும் அது தவர விடுரதில்லை. அந்த நிமிடமே, சம்பவ இடம், நேரம், வாகன எண்—அனைத்தும் போலீசாருக்கு சென்றுவிடுகிறது.

இந்த AI ஹெல்மெட் எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. AI ஹெல்மெட்கள் இருந்தால், பெங்களூரில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் விபத்துகளை குறைக்கலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபோல், சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியிலும் AI அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திடீரென மழை பெய்தால் அருகிலுள்ள பாதுகாப்பான கஃபேக்களை பரிந்துரைப்பது, வானிலை மற்றும் சாலை நிலவரத்தை வைத்து பயணத் திட்டத்தை மாற்ற உதவுவது— இது எல்லாமே தொழில்நுட்பம் மனிதனை புரிந்துகொள்ள முயற்சிக்கும்.

Related Posts