பொது

உம்மிடி எத்திராஜ் மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்!

முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த, உம்மிடி சகோதரர்களில் ஒருவரான உம்மிடி எத்திராஜ் இன்று (அக். 21) வயது மூப்பு காரணமாக 101 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2023-ல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் வைக்கப்பட்டபோது உம்மிடி எத்திராஜை சந்தித்தது குறித்த தனது நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், “அவரது வாழ்க்கையும், கலைத்திறனும், இந்தியாவின் பெருமைமிக்க வளமான பாரம்பரியத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையிலான போற்றத்தக்க தொடர்பை பிரதிபலிக்கின்றன.” என கூறி, அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த உம்மிடி எத்திராஜ்?

1900-ஆம் ஆண்டு வும்மிடி பங்காரு செட்டி அவர்களால் தொடங்கப்பட்ட வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் (VBJ), தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் சிறந்து விளங்க முக்கிய பங்காற்றியவர் வும்மிடி எத்திராஜ். 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஆட்சி அதிகார மாற்றத்தின் அடையாளமாக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. அந்த செங்கோலை உருவாக்குவதில், தனது சகோதரர் வும்மிடி சுதாகருடன் இணைந்து பணியாற்றினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்தச் செங்கோல் நிறுவப்பட்டபோது, எத்திராஜின் பங்களிப்பு நாடு முழுவதும் மீண்டும் கவனம் பெற்றது.

Related Posts