பங்கு சந்தை

6 மாதத்தில் 50% குறைந்த வெள்ளி விலை

மூன்று நாட்கள் இறக்கத்திற்குப் பின் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வெள்ளி விலை எற்ற இறக்கத்துடன் காணபட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த ஒரு வாரத்தில் சுமார் 14% வரை சரிந்துள்ளது. குறிபாக கடந்த 6 மாதத்தில் 50 %-த்திற்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை இந்த சரிவுக்கு காரணம் என்ன என்பதை பார்போம்.

இந்த சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காததால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற முதலிடுகளை குறைந்து கொண்டு அரசுப் பத்திரங்களில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் போர் பதற்றம் அதிகரிக்கும் பொழுது வெள்ளி பொன்ற பதுகாப்பான முதலீடுகளை தேர்தேடுப்பர். தற்பொழுது ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் சற்று தணிந்ததால், பாதுகாப்பான முதலீடுகளின் தேவை குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 121 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது அதன் விலை 57 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. இந்திய சந்தையிலும் ஜனவரியில் ஒரு கிலோ வெள்ளி ரூ.4.25 லட்சம் வரை இருந்த நிலையில், தற்போது அது ரூ.2.30 லட்சம் அளவுக்கு சரிந்துள்ளது.

இனி வெள்ளி விலையின் போக்கு, ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், அரசுப் பத்திர வருமானம் மற்றும் உலக பொருளாதார சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

Related Posts