உலகக்கோப்பை கிரிக்கெட் என்றாலே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து என சில நாடுகள் மீது மட்டுமே ரசிகர்களின் கவனம் இருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் நாடுகளின் அணிகள் முன்பு இருந்ததுபோல இப்போதெல்லாம் ஜொலிப்பதில்லை.
இப்படி ஒரு சூழலில்தான், டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும்,இலங்கையிலும் நடந்து வருகிறது. தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாள அணிகள் மோதின. யாரும் எதிர்பாராத வகையில் நேபாள அணி சிறப்பாக விளையாடியிருப்பது பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.
அடுத்து ஆடிய நேபாள அணி சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவர் வரை முயற்சி செய்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி, வளந்துவரும் அணியான நேபாளிடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.
போட்டி முடிந்து பேசிய நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல், “நாங்கள் உலகக் கோப்பைக்கு நம்பிக்கையுடன் தான் வந்துள்ளோம். வெறுமனே பங்கேற்றுவிட்டு செல்வதற்காக இங்கு வரவில்லை.நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல், மற்ற அணிகளும் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள். இந்த ஆட்டம் உணர்த்திய செய்தி இது தான்” என்றார். அவருடைய இந்த பேச்சு பலருக்கு தன்நம்பிக்கை அளிக்கும் விதமாக இருகிறதென நெட்சன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
நேபாள அணியினரின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தாதக கூறிய இங்கிலாந்து அணியின் கேப்டன், தனது பாரட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறினார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியுடன் தனது சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்திய நேபாள அணிக்கு, தனது சேவைகள் தேவைப்பட்டால் வழங்கத் தயாராக உள்ளதாக தென்னாப்பிரிக்க முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”நேபாள் அணியே, உங்களுக்கு எப்போதாவது என் சேவைகள் தேவைப்பட்டால், நான் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்! நீங்கள் மேலும் மேலும் முன்னேறுங்கள்!” என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு வைரலாகி வருகிறது. 2014ல் முதன்முறையக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நேபாள அணிக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடதக்கது.








