சர்வதேச ஷூ பிராண்டான Kickers-ஸை கோத்தாரி நிறுவனம் வாங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்ததாவது, “இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியானது. ஜனவரி 27ஆம் தேதி, இந்தியா-ஐரோப்பிய யூனியனிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான ஒன்று. எங்களை போன்ற உற்பத்தியாளர்கள் அமெரிக்க வரிவிதிப்பிற்கு பிறகு நிறைய சவால்களை எதிர்கொண்டோம். இத்தகைய சூழலில் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பெரிய அளவில் எங்களுக்கு உதவியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 வளர்ந்த நாடுகள் ஐரோப்பிய யூனியனில் உள்ளது. தோல் அல்லாத காலணிகளுக்கு இதற்கு முன்னர் 17% இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஜீரோவாக ஆகிவிட்டது. இதனால் பெரிய மாற்றம் வரும்.
உலகில் அதிகமாக ஷூ தயாரிக்கும் நிறுவனமான Shoe Town-னுடன் நாங்கள் பங்குதாரராக இருக்கிறோம். அவர்களுடன் இணைந்து பெரம்பலூரில் Crocs ஷூ தயாரித்துக்கொண்டு இருக்கிறோம்.
கரூரில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று Adidas-யும் சீக்கிரமாக உற்பத்தியை துவங்க இருக்கிறோம். இவ்வாறாக நிறைய காலணி தயாரிக்கும் துறையில் நாங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறோம்.
Kickers என்ற பிரெஞ்சு நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். Zodiz, Jeetlo போன்ற குறைந்த விலை காலணி நிறுவனத்தையும் வாங்கியுள்ளோம்.
இந்த ஐரோப்பிய யூனியன் – இந்தியா இடையிலான ஒப்பந்தம் ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனது பார்ட்னர் எனக்கு அழைத்து இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என்றார். ஏனென்றால் இப்போது அமெரிக்க வரிவிதிப்பிற்கு பின்னர் நிறைய கம்பெனிகள் இந்தோனேசியாவிற்கு சென்று விட்டன. ஏனென்றால் இந்தோனேசியா முன்பே அமெரிக்காவுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டுவிட்டது. இதனால் நிறைய நிறுவங்கள் அங்கு உற்பத்தியை தொடங்க சென்றுவிட்டன. இப்போது இதன் மூலமாக நிறைய பிராண்டுகள் திரும்ப இந்தியா வர வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு ஏற்கனவே உற்பத்தியில் இருக்கும் கம்பெனிகளுக்கும் அமெரிக்க வரிவிதிப்பிற்கு பிறகு உண்டான பிரச்சனைகள் குறையும். ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை உறுதி செய்ய முடியும். இன்னும் வேலை வாய்ப்பை கூட்டலாம். இன்னும் நம்பிக்கையாக முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிறுவனங்களும் இன்னும் முதலீடு செய்ய விரும்புவார்கள். தமிழ்நாட்டில் இடம் வாங்கி கட்டுமான பணிகளை செய்து வரும் நிறுவனங்கள் இன்னும் ஆர்வத்துடனும் வேகமாகவும் செயல்படுவார்கள்.
எனவே இந்த ஒப்பந்தத்தை செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், வெளியுறவு துறை அமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை கோத்தாரி நிறுவனத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமில்லாமல், இதுநாள் வரை பிராண்டுகளின் உரிமையாளர்களுக்குதான் நாங்கள் தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். வெறும் தொழிற்சாலை மட்டும் அவர்களுக்கு போதாது. தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டும். ஷூவை டிசைன் செய்ய டிசைன் ஸ்டுடியோ தேவைபடுகிறது. நிறைய ஆய்வுகள் தேவைபடுகிறது. இந்த வசதிகள் எல்லாவற்றையும் உலகத்தரத்தில் செய்பவர்களை நாங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரவேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.
இந்தியாவில் ஷூ பிராண்டுகளுக்காக தயாரிக்கிறோம் ஆனால் இதுவரையில் எந்த கம்பெனியும் சர்வதேச ஷூ பிராண்டை உரிமையாக கொண்டதில்லை. லைசன்ஸ் வேண்டுமானால் 10, 15 ஆண்டுகளுக்கு வைத்திருக்கிறார்களே தவிர, எந்த பிராண்டுக்கும் உரிமையாளராக இல்லை. நாங்கள் Kickers என்ற பிராண்டுக்கு லைசன்ஸ் எடுத்து இருந்தோம் முதல் இந்திய கம்பெனியாக அதை வாங்குவோம் என்று நினைக்கின்றோம். நற்செய்தி வெகு விரைவில் வரும் என்று நம்புகிறோம்.
ஒரு இந்திய கம்பெனி முதல்முறையாக ஒரு சர்வதேச பிராண்டை சொந்தமாக வைத்திருப்பது எங்களுக்கு கௌரவமாக இருக்கும். இது வெறும் பெருமை மட்டுமல்ல. இந்த பிராண்டு 70 நாடுகளில் உள்ளது. இதை சீனாவில் தயாரிக்கின்றனர். இதன் மொத்த உற்பத்தி வாய்ப்பும் இப்போது இந்தியாவிற்கு வரும். இதற்காக பெரிய உற்பத்திக்கூடங்களும் தொழிற்சாலைகளும் தேவைப்படும். இதனால் பெரிய வளர்ச்சியும் உருவாகும்.
மேலும் இன்று IUAD உடன் ஒரு கூட்டு முயற்சியை அறிவிக்க இருக்கிறோம். Institute of Universal Art and Design என்பது உலகின் மிகவும் பாரம்பரியமான ஒரு பல்கலைகழகம். இவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் டிசைன் பல்கலைகழகத்தை தொடங்க இருக்கிறோம். மேலும் டெல்லி, வடகிழக்கு மாநிலங்களிலும் தொடங்க இருக்கிறோம். இது போன்ற நீண்டகால இலக்குகளுக்காக இதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
இந்த ஐரோப்பிய யூனியனுடனான இந்த ஒப்பந்தம் பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள தொழில் உற்பத்தியாளர்களும் இதனை மிகவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். உற்பத்தி செய்ய தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது இன்னும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதோடு மட்டுமில்லாமல், நிலம் வாங்கியிருக்கிறார்கள், நாங்கள் இரண்டு தொழிற்சாலைகளை முடித்து வைத்துவிட்டோம். ஆனால் நிறைய பேர் தொழிற்சாலைகளை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டிலிருந்து முழு முதலீட்டையும் போட்டு செய்வதால் காலதாமதமாகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காலணி உற்பத்தியின் முக்கிய மையமாக மாறிவிடும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஷூ உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தமிழ்நாட்டில் இல்லை; வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். மூலப்பொருட்களுக்காக தனியாக ஒரு தொழிற்பூங்காவை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். உலக அளவிலான மூலப்பொருள் தயாரிப்பாளர்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். பெரம்பலூரில் அதற்காக பூங்காவையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதற்கான EC பிப்ரவரியில் முடிகிறது. இது உள்நாட்டு மூலப்பொருள் தயாரிப்பாளர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் மூலப்பொருள் தயாரிப்பவர்களுக்கும் சில சிரமங்கள் இருக்கின்றன. அவர்களுடன் இணைந்து தனியாக ஒரு Component Cluster உருவாக்க இருக்கிறோம்.
கோத்தாரி நிறுவனம் நிறைய தொழில்களை செய்கிறது ஆனால் காலணி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏனென்றால், பெண்களுக்கான வேலைவாய்ப்புதான். பெண்களுக்கான வேலைவாய்ப்பு அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும். நம்பிக்கையும் ஊக்கமும் கிடைக்கும். கௌரவமாகவும் இருப்பார்கள். எனவே இது பெரிய மாற்றத்தை கொடுக்கும். எனவேதான் இந்த தொழிலை தமிழ்நாடு அரசும் அங்கீகரித்து இருக்கிறார்கள். இதுபோக மத்திய அரசும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் வழியாக உறுதுணையாக இருக்கின்றனர். விரைவில் அமெரிக்காவுடனும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால் இந்தியாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சர்வதேச Shoe Brand-ஐ வாங்கும் கோத்தாரி நிறுவனம்

சர்வதேச ஷூ பிராண்டான Kickers-ஸை கோத்தாரி நிறுவனம் வாங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்ததாவது, “இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியானது. ஜனவரி 27ஆம் தேதி, இந்தியா-ஐரோப்பிய யூனியனிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான ஒன்று. எங்களை போன்ற உற்பத்தியாளர்கள் அமெரிக்க வரிவிதிப்பிற்கு பிறகு நிறைய சவால்களை எதிர்கொண்டோம். இத்தகைய சூழலில் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பெரிய அளவில் எங்களுக்கு உதவியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 வளர்ந்த நாடுகள் ஐரோப்பிய யூனியனில் உள்ளது. தோல் அல்லாத காலணிகளுக்கு இதற்கு முன்னர் 17% இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஜீரோவாக ஆகிவிட்டது. இதனால் பெரிய மாற்றம் வரும்.
உலகில் அதிகமாக Shoe தயாரிக்கும் நிறுவனமான Shoe Town-னுடன் நாங்கள் பங்குதாரராக இருக்கிறோம். அவர்களுடன் இணைந்து பெரம்பலூரில் Crocs Shoe தயாரித்துக்கொண்டு இருக்கிறோம்.
கரூரில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று Adidas-யும் சீக்கிரமாக உற்பத்தியை துவங்க இருக்கிறோம். இவ்வாறாக நிறைய காலணி தயாரிக்கும் துறையில் நாங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறோம்.
Kickers என்ற பிரெஞ்சு நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். Zodiz, Jeetlo போன்ற குறைந்த விலை காலணி நிறுவனத்தையும் வாங்கியுள்ளோம்.
இந்த ஐரோப்பிய யூனியன் – இந்தியா இடையிலான ஒப்பந்தம் ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனது பார்ட்னர் எனக்கு அழைத்து இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என்றார். ஏனென்றால் இப்போது அமெரிக்க வரிவிதிப்பிற்கு பின்னர் நிறைய கம்பெனிகள் இந்தோனேசியாவிற்கு சென்று விட்டன. ஏனென்றால் இந்தோனேசியா முன்பே அமெரிக்காவுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டுவிட்டது. இதனால் நிறைய நிறுவங்கள் அங்கு உற்பத்தியை தொடங்க சென்றுவிட்டன. இப்போது இதன் மூலமாக நிறைய பிராண்டுகள் திரும்ப இந்தியா வர வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு ஏற்கனவே உற்பத்தியில் இருக்கும் கம்பெனிகளுக்கும் அமெரிக்க வரிவிதிப்பிற்கு பிறகு உண்டான பிரச்சனைகள் குறையும். ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை உறுதி செய்ய முடியும். இன்னும் வேலை வாய்ப்பை கூட்டலாம். இன்னும் நம்பிக்கையாக முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிறுவனங்களும் இன்னும் முதலீடு செய்ய விரும்புவார்கள். தமிழ்நாட்டில் இடம் வாங்கி கட்டுமான பணிகளை செய்து வரும் நிறுவனங்கள் இன்னும் ஆர்வத்துடனும் வேகமாகவும் செயல்படுவார்கள்.
எனவே இந்த ஒப்பந்தத்தை செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், வெளியுறவு துறை அமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை கோத்தாரி நிறுவனத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமில்லாமல், இதுநாள் வரை பிராண்டுகளின் உரிமையாளர்களுக்குதான் நாங்கள் தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். வெறும் தொழிற்சாலை மட்டும் அவர்களுக்கு போதாது. தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டும். ஷூவை டிசைன் செய்ய டிசைன் ஸ்டுடியோ தேவைபடுகிறது. நிறைய ஆய்வுகள் தேவைபடுகிறது. இந்த வசதிகள் எல்லாவற்றையும் உலகத்தரத்தில் செய்பவர்களை நாங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரவேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.
இந்தியாவில் ஷூ பிராண்டுகளுக்காக தயாரிக்கிறோம் ஆனால் இதுவரையில் எந்த கம்பெனியும் சர்வதேச Shoe பிராண்டை உரிமையாக கொண்டதில்லை. லைசன்ஸ் வேண்டுமானால் 10, 15 ஆண்டுகளுக்கு வைத்திருக்கிறார்களே தவிர, எந்த பிராண்டுக்கும் உரிமையாளராக இல்லை. நாங்கள் Kickers என்ற பிராண்டுக்கு லைசன்ஸ் எடுத்து இருந்தோம் முதல் இந்திய கம்பெனியாக அதை வாங்குவோம் என்று நினைக்கின்றோம். நற்செய்தி வெகு விரைவில் வரும் என்று நம்புகிறோம்.
ஒரு இந்திய கம்பெனி முதல்முறையாக ஒரு சர்வதேச பிராண்டை சொந்தமாக வைத்திருப்பது எங்களுக்கு கௌரவமாக இருக்கும். இது வெறும் பெருமை மட்டுமல்ல. இந்த பிராண்டு 70 நாடுகளில் உள்ளது. இதை சீனாவில் தயாரிக்கின்றனர். இதன் மொத்த உற்பத்தி வாய்ப்பும் இப்போது இந்தியாவிற்கு வரும். இதற்காக பெரிய உற்பத்திக்கூடங்களும் தொழிற்சாலைகளும் தேவைப்படும். இதனால் பெரிய வளர்ச்சியும் உருவாகும்.

மேலும் இன்று IUAD உடன் ஒரு கூட்டு முயற்சியை அறிவிக்க இருக்கிறோம். Institute of Universal Art and Design என்பது உலகின் மிகவும் பாரம்பரியமான ஒரு பல்கலைகழகம். இவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் டிசைன் பல்கலைகழகத்தை தொடங்க இருக்கிறோம். மேலும் டெல்லி, வடகிழக்கு மாநிலங்களிலும் தொடங்க இருக்கிறோம். இது போன்ற நீண்டகால இலக்குகளுக்காக இதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.
இந்த ஐரோப்பிய யூனியனுடனான இந்த ஒப்பந்தம் பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள தொழில் உற்பத்தியாளர்களும் இதனை மிகவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். உற்பத்தி செய்ய தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது இன்னும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதோடு மட்டுமில்லாமல், நிலம் வாங்கியிருக்கிறார்கள், நாங்கள் இரண்டு தொழிற்சாலைகளை முடித்து வைத்துவிட்டோம். ஆனால் நிறைய பேர் தொழிற்சாலைகளை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டிலிருந்து முழு முதலீட்டையும் போட்டு செய்வதால் காலதாமதமாகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காலணி உற்பத்தியின் முக்கிய மையமாக மாறிவிடும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “Shoe உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தமிழ்நாட்டில் இல்லை; வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். மூலப்பொருட்களுக்காக தனியாக ஒரு தொழிற்பூங்காவை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். உலக அளவிலான மூலப்பொருள் தயாரிப்பாளர்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். பெரம்பலூரில் அதற்காக பூங்காவையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதற்கான EC பிப்ரவரியில் முடிகிறது. இது உள்நாட்டு மூலப்பொருள் தயாரிப்பாளர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் மூலப்பொருள் தயாரிப்பவர்களுக்கும் சில சிரமங்கள் இருக்கின்றன. அவர்களுடன் இணைந்து தனியாக ஒரு Component Cluster உருவாக்க இருக்கிறோம்.