வணிகம்

AI Summit-ல் டிரெண்டாகும் AI மாடல்! முக்கிய CEO-கள் பாராட்டு

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற India AI Impact Summit இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சாதாரண தொழில்நுட்ப அறிவிப்புகள் மட்டுமல்ல, முழுக்க முழுக்க இந்தியாவை AI-ல் சிறந்த நாட்டாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக உலகின் பெரிய நிறுவனங்களின் CEO-க்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் முக்கிய AI-யைகளாக பார்க்கப்படுவது:

Bill Gates Foundation தொடங்கிய “Advantage India for AI” முயற்சி, இந்தியா மற்றும் Global South நாடுகளின் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைத்து சமூக நலனுக்கான ஏஐ வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது.

அதேபோல் Google நிறுவனத்தின் CEO Sundar Pichai, இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். விசாகப்பட்டினத்தில் புதிய ஏஐ மையம் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், Adani Group 100 பில்லியன் டாலர் முதலீட்டுடன் தரவு மையங்கள் மற்றும் மின்சார திட்டங்களை அறிவித்தது.

இந்திய அரசு சார்பில் “Sovereign AI” என்ற கருத்தை முன்வைத்து, நாட்டின் கணினி திறன் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்றதே இந்த AI-யின் முக்கிய இலக்காகும். இதுமட்டுமில்லாமல் ‘MANAV’ என்ற மனிதநேய பார்வையை முன்வைத்து, ஏஐ நல்லது, பொறுப்பானது, அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றார். இந்த அறிவிப்புக்கு பல நிறுவனங்களின் CEO-களிடமிருந்து பாராட்டுகளை பெற்று இருக்கிறது.

இந்தியாவின் முக்கிய நிறுவனமான Reliance Jio “Jio Shikshak” என்ற ஏஐ ஆசிரியரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் சுலபமாக பாடங்களை கற்க உதவுமாம்.

Nokia மற்றும் HMD Global இணைந்து சாதாரண போன்களிலும் இயங்கும் Sarvam AI Chatbot சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 38,000 GPU-களை மாணவர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு வழங்கும் Common Compute Platform-ஐ இந்திய அரசு உருவாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகிறது. இந்தியா, ஏஐ உலகத்தில் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற முயற்சி செய்து வருகிறது.

Related Posts