நுங்கம்பாக்கம், KICL நிறுவன அலுவலகம்
KICL நிறுவனத்தின் தலைவர், டாக்டர். ஜெ. ரஃபிக் அகமது அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தின் பிரபலமான எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் (EXNORA International) நிறுவனத்துடன் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்தானது.
எக்ஸ்னோரா சார்பில் அதன் தலைவர் செந்தூர்பாரி, நிர்வாக மற்றும் நிதிப் பிரிவுத் தலைவர் முனாவர்தீன் மற்றும் கோத்தாரி டிஜிட்டல் துணைத்தலைவர் ஆர். பாலகிருஷ்ணன், இண்டஸ்ட்ரியல் எக்கனாமிஸ்ட் இதழின் ஆசிரியர் கே.டி. ஜெகநாதன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதன்படி, இனிவரும் காலங்களில் நீர்நிலைகளை மீட்டெடுத்தல், சமூகக் காடுகளை வளர்த்தல், கழிவு மேலாண்மை (Waste Management), மற்றும் திறன் மேம்பாடு (Skill Development) ஆகிய பிரிவுகளின் கீழ் இணைந்து செயல்பட ஒரு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த KICL சேர்மன் தனது அட்வான்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.








