தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், திரையுலகைத் தாண்டி ஒரு கார்பந்தய வீரராகவும் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்.
‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு கார்பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி, ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற சொந்த நிறுவனத்தையும் தொடங்கினார்.

துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரிசுகளை வென்ற இவரது அணிக்கு, அஜித்குமாரின் பங்களிப்பைப் பாராட்டி, SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம் ‘GENTLEMAN DRIVER OF THE YEAR 2025’ விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருதை அவர் இத்தாலியின் வெனிஸ் நகரில் குடும்பத்துடன் பெற்றுக்கொண்டார்.









