பொது

தலைவர் 173: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – சுந்தர்.சி கம்பேக்

1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அருணாச்சலம்’ மூலம் ரஜினிகாந்தை முதன்முதலில் இயக்கியவர் இயக்குனர் சுந்தர்.சி. அந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு, சுந்தர்.சி அவர்கள் சூப்பர் ஸ்டாரின் 173-வது படத்தைத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மேலும் பிரம்மாண்டமாக்குவது… இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதுதான்.

ரஜினி – சுந்தர்.சி கூட்டணி, கமல் ஹாசன் தயாரிப்பில்… தமிழ் சினிமா வரலாற்றின் மிக முக்கியமான கூட்டணியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது குறித்த உறுதியான அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Posts