பொது

First இன்ஸ்டாகிராம் – Next அரசியல்… மாஸ் காட்டும் விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தவெக தலைவருமான விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஒவ்வொரு திரைப்படமும் வசூலில் சாதனை படைக்கிறது. அதைத்தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களிலும் மாஸ் காட்டி வருகிறார்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தவெக 2வது மாநாடு Facebook, Instagram என எல்லா பக்கங்களிலும் டிரெண்டிங்கில் உள்ளது.

முழுநேர அரசியலில் இறங்கிய விஜய், மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து ஆவேசமாக பேசிய வீடியோவும் அதற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பும் இந்த வாரத்தின் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் அதிக தொண்டர்கள் (14.78 லட்சம்) பங்கேற்ற மாநாடு என்ற சாதனையை தவெக மதுரை மாநாடு படைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக (11.86 லட்சம்), சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி (11.03 லட்சம்) ஆகியவை உள்ளன.

முதல் மாநாட்டைப் போலவே, இந்த முறையும் மேடைக்கு வந்த விஜய், லட்சக்கணக்கான ரசிகர்களை சந்திக்க Ramp-Walk செய்தார். அப்போது ரசிகர்கள் அளித்த சத்தமும் ஆரவார வரவேற்பும் அந்த இடத்தையே அதிர வைத்தது. அந்த தருணத்தை தவெக தலைவர் விஜய் ஒரு செல்ஃபி வீடியோவாக எடுத்து, Instagram மற்றும் Facebook பதிவிட்டார். சில மணி நேரங்களிலேயே லைக்குகள் குவிந்து சாதனை படைத்தது. தற்போது வரை இன்ஸ்டாகிராமில் 10 Million (1 கோடி) லைக்குகளை பெற்று, ஒரு போஸ்ட்டுக்கு அதிக லைக்குகளைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புதிய சாதனையையும் விஜய் படைத்துள்ளார்.

விஜய்

ஒரு பக்கம் அரசியல், மறுபுறம் சினிமா என பிஸியாக இருக்கும் விஜய், 2026 மக்களவை தேர்தலுக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனது சினிமா பயணத்தில் கடைசி திரைபடமான ‘ஜனநாயகன்’ அரசியல் பேசும் திரைப்படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விஜயின் சினிமா பயணத்தில் கடைசி படம் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Posts