இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை குஜராத்தின் கட்ச் பகுதியில் அதானி குழும் துவங்கியுள்ளது. அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Adani New Industries Limited – ANIL) நிறுவனம் துவங்கியிருக்கும் இந்த Off-Grid 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலையானது, தூய ஆற்றல் (Clean Energy) துறையில் இதுவொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
பூமியில் அதிகமாக கிடைக்கும் தனிமங்களில் (Element) ஒன்றான ஹைட்ரஜன், எரிபொருள் (Fuel). தொழிற்சாலைகள், உர உற்பத்தி ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற இடங்களில் இதன் பயன்பாடு முக்கியமானது. படிமங்களில் (Fossil fuels) இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனால் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சுற்றுச்சூலை பாதுகாக்கும் நோக்கத்தில், பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிக்கப்பட்டது. நீரிலிருந்து எடுக்கப்படும் இந்த பசுமை ஹைட்ரஜனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்தியாவின் Zero Carbon Emission நோக்கத்திற்கு, பெரிய பங்களிப்பை வழங்கும் ஒரு முக்கிய திட்டம். பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான மையமாக ( Green Hydrogen Hub) இந்தியாவை மாற்றும் லட்சியத்திற்கு இது வலுவாக அமையும் என்று ANIL நம்பிக்கை தெரிவித்துள்ளது









