பொது

வண்டிய ஓட்ட தெரிஞ்சா மட்டும் போதாது.. Maintain பண்ண தெரிஞ்சிருக்கனும் | 5 Tips

நாம் தினமும் பைக் ஓட்டுறோம். ஆனா அந்த பைக்குகளை சரியாக Maintain பன்னுறோமா? இந்த 5 Tips-ஐ follow பண்ணுங்க!

1. பீரியாடிக் சர்வீஸ் தவறாமல் செய்யுங்கள்:
நீங்கள் தினமும் பைக் ஓட்டுபவராக இருந்தால், ஒவ்வொரு 2.5 மாதத்திற்கு ஒருமுறை Full Service செய்ய வேண்டும். இல்லையென்றால் பைக் நடுவழியிலேயே நிற்க வாய்ப்பு உள்ளது. சர்வீஸ் செய்ய நேரம் இல்லையென்றால், இஞ்சின் ஆயிலையாவது மாற்றி விடுங்கள். இல்லையென்றால், இன்ஜின் சீஸ் ஆக வாய்ப்பு இருக்கும்.

2. பைக் கீழே விழுந்திருந்தால்…
வண்டியை நிறுத்தி கடைக்கு சென்று வந்ததும், பைக் கீழே விழுந்திருந்தால், உடனே Start செய்ய வேண்டாம். எர்லாக் (Air Lock) ஆகியிருக்கும். அதனால் 2 நிமிடங்கள் கழித்து Start பண்ணுங்க. இல்லையென்றால் எவ்வளவு முயற்சி செய்தாலும் Start ஆகாது.

5

3. High Beam முறையை சரியாகப் பின்பற்றுங்கள்:
இரவு நேரங்களில் நகரத்தில் பைக் ஓட்டும்போது High Beam Light எரியவிட்டு ஓட்டாதீர்கள். எதிரில் வருபவர்கள் திக்குமுக்காடி விடுவார்கள். Highway-ல் மட்டும் High Beam பயன்படுத்தலாம்.

4. Side Stand-ல் உட்காராதீர்கள்:
பைக்கை நிறுத்தி Side Stand போட்டபின் அதில் உட்கார வேண்டாம். தற்போது பல பைக்குகளில் Side Stand Sensor இருக்கும்; அது விரைவில் பழுதடையும்.
அதேபோல, பெட்ரோல் போட்டுவிட்டு பைக்கை பல நாட்கள் பயன்படுத்தவில்லையென்றால், அந்த பெட்ரோலை முழுவதுமாக drain பண்ணிவிடுவது நல்லது. இல்லையெனில் பெட்ரோல் ஜெல்லி மாதிரி இறுகி, Starting Trouble ஏற்படும்.

5. Reserve-வில் ஓட்டாதீர்கள்:
BS6 வண்டிகளில் குறைந்தபட்சம் 2 லிட்டர் பெட்ரோல் இருக்க வேண்டும். இல்லையெனில் Petrol Filter வீனாகிவிடும்.
அதேபோல், பைக்கின் செயின், ஸ்ப்ராக்கெட்டுகளில் அடிக்கடி கவனம் செலுத்துங்கள். மண், தூசி படிந்த செயின், வீல்களை சுழற்சிக்க வைக்கும் போது, இஞ்சின் பவரை அதிகம் எடுத்துக் கொள்ளும். வாரத்திற்கு ஒருமுறை செயினுக்கு லூப்ரிகன்ட் அடிக்கலாம். இதனால் mileage கூடும்.

Related Posts