பொது

இது நடந்தால்… இந்தியர்களில் மிக காஸ்ட்லியான விவாகரத்து இதுதான்!

சமீப காலமாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்ரீதர் வேம்பு – பிரமிளா சீனிவாசன் விவாகரத்து வழக்கு, பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வழக்கில் சுமார் 1.7 பில்லியன் டாலர் ஜீவனாம்சம் வழங்க கலிபோர்னியாவின் சுப்பீரியர் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த தொகை வழங்கப்பட்டால், இது இந்தியர்களில் இதுவரை நடந்த மிகக் காஸ்ட்லியான விவாகரத்தாக மாறும். இந்த விவகாரம் இந்தியர்களிடையே மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கு.

உலகின் முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ZOHO-வை வெற்றிகரமாக வளர்த்த பிறகு, கிராமப்புற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் பலருக்கும் inspiration-ஆக உள்ளார். ஆனால், எளிமை, புகழ், கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் கூட, குடும்ப வாழ்க்கைச் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கு என பலர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து இருக்குறதாக ஸ்ரீதர் வேம்பு தரப்பு வக்கில் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இதற்கு முன்பும் பல காஸ்ட்லியான விவாகரத்துகள் நடந்து இருக்கு. Bill Gates – Melinda Gates, 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்தபோது, சுமார் 73 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் ஜீவனாம்சமாக வழங்கப்பட்டது.

அதேபோல், Jeff Bezos – MacKenzie Scott விவாகரத்தில், சுமார் 38 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் alimony-ஆக வழங்கப்பட்டன. இந்த பிரிவுகள் அந்தந்த காலகட்டங்களில் உலகளாவிய அளவில் பெரும் பேசும் பொருளாக மாறியது.

இந்த பட்டியலில் ஊடக அதிபர் Rupert Murdoch போன்றவர்களின் விவாகரத்துகளும் இடம்பெற்று இருக்கு. இவர்களது வாழ்க்கைகள் ஒன்றைத் தெளிவாகச் காட்டுகிறது — கோடிகளில் பணம் இருந்தாலும், வாழ்க்கைச் சிக்கல்கள் அனைவருக்கும் பொதுவானவை தான் என மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts