பொது

19 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார் திவ்யா: Success Flashback-கள்…

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் செஸ் வீரர்கள் உலக அளவில் வெற்றிநடை போட்டு வருகின்றனர். உதாரணமாக, செஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது விஸ்வநாதன் ஆனந்த் தான். ஆனால், தற்பொழுது உலக அளவில் நடந்த செஸ் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த D. Gukesh, R. Praggnanandhaa போன்றவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற Chess Olympiad போட்டியில், இந்தியா முதன்முறையாக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. அதே ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற D. Gukesh, உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

2025 வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில், D. Gukesh, Arjun Erigaisi, R. Praggnanandhaa மற்றும் S. Aravindh ஆகிய நான்கு வீரர்களும் இருப்பது இதுவே முதல் முறை. இந்த சாதனைகள் ஒரு பக்கம் இருக்க, தற்போது திவ்யா தேஷ்முக் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலக

ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த 2 பெண்கள், திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி மோதினர். இறுதி சுற்று (ஜூலை 26) டிரா ஆனது. ஜூலை 27 அன்று நடைபெற்ற சுற்றும் டிரா ஆனதால், இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்பதை நிர்ணயிக்கும் டைபிரேக்கருக்கு சென்றது. ஜூலை 28 நடைபெற்ற சுற்றில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

5 வயதில் தொடங்கியது இந்த பயணம்:
தன் அக்கா badminton விளையாடச் செல்லும் போது, 5 வயதான திவ்யா கூடச் செல்வது வழக்கம். திவ்யாவுக்கும் badminton விளையாட ஆசை, ஆனால் அந்த வயதில் அவரை யாரும் சேர்க்கவில்லை. அதே ஹாலில் நடைபெறும் செஸ் போட்டிகளைப் பார்க்கத் தொடங்கினார்.

அக்கா சிறிது காலத்தில் badminton-ஐ விட்டுவிட்டாலும், திவ்யா சதுரங்கத்தில் அதிக ஆர்வம் கொண்டதால், வீட்டுக்கு அருகே உள்ள செஸ் அகாடமியில் சேர்ந்தார். 2012 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் Under-7 பிரிவில் பட்டம் வென்றார். அதன் பின், திவ்யாவின் பயணம் வெற்றிப் பாதையாகவே தொடர்ந்தது.

2013-ல், 7 வயதில் திவ்யா FIDE Master பட்டம் பெற்றார். இப்போது, ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலக

மேலும், கடந்த 34 ஆண்டு வரலாற்றில், Candidates Tournament-க்கு தகுதி பெற்ற மிக இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் திவ்யாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், திவ்யா இந்தியாவின் நான்காவது பெண் Grandmaster என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு Koneru Humpy, D. Harika, Vaishali Rameshbabu ஆகியோர் மட்டுமே இந்த பட்டத்தை வென்றுள்ளனர்.

Related Posts